ஒரு ஜூரியின் டயரி – 4 1/2
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.
‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.
என் ஜூரி டயரி படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:
‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’
‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’
‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் கோஸ்டில் நாங்கள் ஜூரியானால் வெறுமனே பேஸ்தடித்துக் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டி இருக்கிறதே!’
இப்படிப்பட்ட கவலைகளால் நம் வாசகர் உலகம் குழம்பிக் கிடக்கிறது.
தனி மடலில் கேட்கிறார்கள், தண்ணியடித்து விட்டு விம்முகிறார்கள், ”தல, நீ ஒண்ணும் கண்டுக்காத பிரதர்” என்றும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள்.
அதனால் தான் இந்த அரைப் பக்கக் கேள்வி, உங்களைப் பார்த்து:
இந்த ஜூரி டயரியைத் தொடர்ந்து
எழுதிக் கிழிக்கட்டுமா? அல்லது கிழித்துப் போட்டு விடட்டுமா?!
(சட்டம் தன் வேலையைத் தொடருமா ?)
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on February 23, 2010
8 Comments
ramboramji on February 24th, 2010
Nallathaane poitrukku 41/2 la 71/2 ya?.. ungala yaaru ippo kozhapivittadhu? Logic pathi kavalaipatta, tamizhana irukkamudiyadhu.. Keep going LA.
ஆயில்யன் on February 24th, 2010
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு!

சட்டம் தன் கடமையை செய்யவேண்டும்
mohan on February 24th, 2010
Please continue…
I dont understand what is the issue with your diary..
-Mohan
Rama on February 24th, 2010
Erundu pegu pota, diary thanave ezuthum. Summa kalku Ram
Keep going, don’t be mad and stop this. Where else we will get our quota of belly aches?!!
kannan on February 26th, 2010
ஒரு ரிஷி மூலம், நதி மூலமே கேட்க கூடாது எனும் போது, ஜூரி மூலம் கண்டிப்பாக கேட்டல் கூடாது. தொடருங்கள். சுவையாக உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on February 26th, 2010
யார் கிட்டேயும் கோபமெல்லாம் இல்லிங்க. நாம என்ன அல்லாரும் இங்க வந்து கண்டிப்பா படிச்சே ஆகணும்னு குகநாதன், ராதாரவி கணக்கா பிகிலா ஊதினோம்?
அஜீத் – ரஜினி மேட்டரையே ஊதி அணைச்சு “கலைத் தாயின் ஒரே குழந்தைகள்”ன்னு சொல்லி ஊத்தி மூடிட்டாங்க, அப்பால நமக்கு ஏது ரீஜன்?
சட்டம் தன் வேலையைத் தொடரும்!
சீமாச்சு.. on May 16th, 2010
எல்லேராமண்ணா, பிப்ரவரியிலேயே சட்டம் தன் வேலையைத் தொடரும்னு போட்டாலும், இன்னும் தொடரக் காணோமே… சட்டம் “கொஞ்சம் மெதுவாகத்தான்” கடமையைச் செய்யும் போலருக்கே…
மாயவரம் போனீங்களா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on May 16th, 2010
’சட்டம் ஒரு இருட்டறை’ தானே, கொஞ்சம் தட்டுத் தடுமாறித்தான் எல்லாம் வேலை செய்யும்! எல்லே திரும்பி விட்டேன். இனிமேல் முழுமூச்சுடன் இந்த வேலைகள்தான்.
மாயவரம் போகமுடியவில்லை. சென்னை வெயிலே போட்டு சாத்தி விட்டது.