மார்லன்‌ பிராண்டோ

சென்ற நூற்றாண்டின்‌ மிகச்‌ சிறந்த மகா நடிகனின்‌ மரணச்‌ செய்தி
இன்று காலை என்னை உலுக்கியது. சில வருடங்களாகவே ஓரளவுக்கு
எதிர்பார்க்கப்பட்ட செய்திதான்‌ என்றாலும்‌ கண்கள்‌ கலங்கியதை நிறுத்த
முடியவில்லை. நம்‌ ஊர்ச்‌ சிங்கம்‌ சிவாஜி மறைந்தபோது கிளர்ந்த
உணர்வுகள்‌ மறுபடியும்‌ என்னுள்‌ தலைதூக்கின .

பிராண்டோ பிறவி நடிகன்‌. தனக்குள்‌ இருக்கின்ற திறமையைக்‌
கண்டறிந்து, பின்னர்‌ தன்னைத்தானே அந்த அளவுக்கு உழைத்து,
வருத்தித்‌ தயார்படுத்திக்கொண்டு, சிகரங்களைத்‌ தொட்ட பெரும்‌
நடிகன்‌. இப்போது நம்‌ ஊர்‌ ‘ சேது! விக்ரம்‌ எல்லாம்‌ வெற்றிகரமாகச்‌
செய்து காட்டுகின்ற “மெதட்‌ ஆக்டிங்‌! முறைக்கே இலக்கணம்‌
வகுத்தவன்‌ .

அம்மா ஒரளவு சின்னச்‌ சின்ன வேஷங்களில்‌ பார்ட்‌ டைமாக நடித்துக்‌
கொண்டிருந்தவள்‌. ஆனால்‌ முழுநேரக்‌ குடிகாரி. அப்பன்‌ ஸ்திரிலோலன்‌ .
வீட்டில்‌ சுகமில்லை. 19 வயதில்‌ வீட்டை விட்டூ ஓடி நியூயார்க்‌ வந்து
சேர்ந்த இளைஞன்‌, அக்கா உதவியுடன்‌ நடிப்புக்‌ கல்லூரி ஒன்றில்‌
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான்‌ . அப்போதே இந்த வைரம்‌ கொஞ்சம்‌
கொஞ்சமாகப்‌ பட்டை தீட்டப்‌ படுகிறது. பிற்காலத்து
ஜொலிப்புக்கெல்லாம்‌ இது தான்‌ ரிஷிமூலம்‌. நடிப்பு பயின்றுகொண்டே
ஒரு நாடகக்‌ கம்பெனிமிலும்‌ சேருகிறான்‌ . முதலில்‌ எல்லாம்‌
“கூட்டத்தோடு கோவிந்தா! வாக சாதா சோதா வேடங்கள்‌ தான்‌.
ஆனாலும்‌ சின்னச்‌ சின்ன வேடங்களில்‌ சோபிக்கத்‌ தவறவில்லை .

மூன்று நான்கு வருட கஷ்டத்திற்குப்‌ பிறகு, 1& ௨௯௦௮௨ 14கரஐ௨
௨௨1௧1-நாடகத்தில்‌ ஹீரோ ரோல்‌ கிடைக்கிறது. டைனமைட்‌ மாதிரிச்‌
சீறிப்‌ பொங்கித்‌ திரையெல்லாம்‌ வெடித்துச்‌ சிதறும்‌ ரோல்‌. மார்லன்‌
அசத்துவதைக்‌ கண்டு நியுயார்க்கே பிரமிக்கிறது. ஹாலிவுட்‌
விட்டுவைக்குமா என்ன? அதே நாடகத்தை அதே பெயரில்‌ படமாக்கி
உலகமெங்கும்‌ மார்லனின்‌ புகழ்‌ பரவுகிறது . படமா அது? ஹாலிவுட்‌
பொக்கிஷம்‌. காணாமலே போய்‌ விட்ட ஒரு கலாசார அழிவும்‌, தாங்க
முடியாத மனித சோகங்களும்‌, பொய்ககளும்‌ சேர்ந்து இழையோடி
மனசைப்‌ பிழியும்‌ பட இலக்கியம்‌.

அடுத்து வந்த “0 5 817017 1-ல்‌ ஒரு முரட்டுத்தனமான கூலி.
“மகா முரடன்‌, ஆனாலும்‌ சென்சிடிவ்‌ ஆனவன்‌ ‘ வேஷம்‌. மனிதர்‌
பிய்த்து உதறுகிறார்‌. ஆஸ்கார்‌ அவார்டூம்‌ கிடைக்கிறது. “பீபி. 1 பக
கேக்காமல்‌ மார்க்‌ ஆண்டனி, “பேரு காம்‌ 0011த1 என்று மார்லன்‌
பிராண்டோவின்‌ ஹாலிவுட்‌ பயணம்‌ தொடர்கிறது. ஒரு கால கட்டத்தில்‌
ஹாலிவுட்டிலேயே மிக அதிக சம்பளம்‌ வாங்கிய நடிகராவும்‌ ஆகிறார்‌.

பணமும்‌ புகழும்‌ மட்டும்‌ வந்தால்‌ போதுமா? சொந்த வாழ்க்கையில்‌
சோகங்கள்‌, டைவர்ஸ்கள்‌, அளவுக்கதிகமான குடிப்பழக்கம்‌ எல்லாமே
அவரைத்‌ துரத்துகின்றன. சரி, இவர்‌ கதை இவ்வளவுதான்‌! என்று

எல்லோரும்‌ எழுந்திருக்குமுன்னர்‌, 1972-ல்‌ ‘ே87-1%1-ல்‌ மறுபடியும்‌
சிறி எழுகிறார்‌ மனிதர்‌, நடிக மன்னர்‌. மறுபடியும்‌ ஆஸ்கர்‌. அவருடைய
நடிப்பு எந்த அளவுக்குப்‌ பண்பட்டிருக்கிறது என்பதை மறுபடியும்‌
காண்கிறோம்‌. “அண்டர்‌ ஆக்டிங்‌! குக்கு அந்த நடிப்பு தான்‌
இலக்கணம்‌.

சம்பாதித்த பணத்தில்‌ முக்கால்வாசியை ஏழை எளியவர்களுக்காகச்‌

செலவிட்டதும்‌, குறிப்பாகப்‌ பழங்குடிச்‌ செவ்விந்தியரின்‌

உரிமைகளுக்காகப்‌ பேராடியதும்‌ அவருடைய தனி மனித வெற்றிகள்‌ .

ஒரு கால கட்டத்தில்‌ ஆஸ்கர்‌ அவார்டையே வேண்டாமென்று ‘போடாங்
. ” என்று தூக்கியெறிந்ததும்‌ மறக்க முடியாதது .

பிறகு, பல வருடங்களுக்கு ஏனோதானோவென்று சின்னச்‌ சின்ன

ரோல்களில்‌ தலைகாட்டினாலும்‌, பல சொந்த வாழ்க்கை நிகழ்வுகளில்‌

அவர்‌ சோதிக்கப்ப்ட்டூக்‌ கலங்கினாலும்‌, ஒரு மனித வாழ்வுக்கு ஒரு

“காட்‌ஃபாதர்‌’ போதாதா, என்ன?

இன்னொரு மார்லன்‌ பிராண்டோ ஹாலிவுட்டில்‌ இப்போதைக்கு இல்லை.

-லாஸ்‌ ஏஞ்சல்ஸ்‌ ராம்‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *